யானை உணர ஆரம்பித்தது.
குட்டியானையே நீ இன்று எமக்கு உணவாகப் போகிறாய். நான் உன்னை கடித்துத் தின்னப் போகிறேன். குட்டியானை பயத்தில் முகம் குப்புற விழுந்தது. ஆனால் மூக்கில் புகுந்த மண்னை உடனே எழும்பிக் குந்தியது. திரும்பிப் பாராமல் ஒட ஆரம்பித்தது. பசி எடுத்த பெரிய சிங்கம் குட்டியானையை விரட்ட ஆரம்பித்தது. குட்டி யானைக்கு ஓட ஓட மூச்சு வாங்கியது சிங்கத்திடம் போய் ஏன் மாட்டிக் கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்து கொண்டது.
சிங்கம் அதனைத் தொடர்ந்து விரட்டிக் கொண்டு சென்றது. ஆனால் வயது போனதால் பெரிய சிங்கத்திற்கு தொடர்ந்து ஓட முடியவில்லை. குட்டி யானை மரங்களை முறித்துக் கொண்டு ஓடியது. ஓடி தீக் கோழிகள் வாழும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. நீண்ட காலத்துக்கு முன் தீக் கோழிகள் இட்டமுட்டைகள் அங்கு இருந்தன. ஒவ்வொரு முட்டையும் பழூனைவிட பெரிதாக இருந்தது. ஒவ்வொரு முட்டையும் கல்லைவிடவும் கடினமாக இருந்தது. குட்டியானை தாயின் உபதேசத்தை மனதில் நினைத்துக் கொண்டது. தீக்கோழிகளின் முட்டை மீது மிதிக்காமல் ஓடியது. ஆனால் பின்னால் விரட்டி வந்த சிங்கம் தீக் கோழிகளின் முட்டையை மிதித்துக் கொண்டோடியது. காலில் அம் முட்டைகள் மோதியதால் சிங்கம் கர்ச்சித்தது. குட்டி யானை முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு முள்ளம் பன்றி குறுக்கேவந்தது. குட்டியானை தாயாரின் உபதேசத்தை நினைத்துப் பார்த்தது. முள்ளம் பன்றிகளைக் கண்டால் அதன் அருகில் போய் விடாதே அதன் மேல் மிதித்து விடாதே என்ற தாயாரின் உபதேசம் ஞாபகத்திற்கு வரவே முள்ளம் பன்றியை சுற்றி ஓடியது. பின்னால் வந்த சிங்கம் முள்ளம் பன்றியை காணவில்லை. ஆனால் முள்ளம் பன்றி சிங்கத்தைக் கண்டு கொண்டது.
குழந்தைகளே என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?… கிழட்டுச் சிங்கம் ஆ…ஊ… என்று அழ ஆரம்பித்தது. அதன் உடம்பு முழுக்க முள்ளம் பன்றியின் முற்கள் குத்தி வழி எடுத்தது. குட்டி யானை திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாக ஓடியது. ஓடும் வழியில் வாழைமரங்கள் இருந்தன. அதில் வாழைக் குழைகளும் பழுத்து இருந்தன. ஒரு மரத்தில் குழவிக் கூடு ஒன்று இருந்தது. அம் மரத்தில் பழுத்த வாழைப் பழங்களும் இருந்ததால் ஆனாலும் ஒரு வாழைப் பழத்தை திருகி வாயில் போட்டுக் கொள்ளலாமா என்ற ஆசையும் எழுந்தது. குழவிக் கூட்டை உடைத்து விடவும் கூடாது. ஆசை மிகுதியால் குட்டி யானை தும்பிக்கையை நீட்டி ஒரு வாழைப் பழத்தைப் பித்தது அது இழுத்த இழுப்பில் வாழை மரம் உடைந்தது. குழவிக்கூடு விழுந்தது. அதிலிருந்து ஏராளமான குழவிகள் கோபத்தோடு வெளியே பறந்து வந்தன. தப்பினோம் பிழைத்தோம் என்று குட்டி யானை ஓட ஆரம்பித்தது. பின்னால் வந்த சிங்கத்திற்கு இது தெரியாது. சிங்கம் ஆ… ஊ… என்று அழ ஆரம்பித்தது. முள்ளம் பன்றியின் முற்கள் போதாதென்று குழவிகள் சிங்கத்தை கொட்ட ஆரம்பித்தன. குட்டியானை திரும்பிப் பார்த்தது சிங்கத்தை காணவில்லை. சிங்கத்தின் பயம் இல்லாததால் குட்டி யானை மெதுவாக நடக்க ஆரம்பித்தது. சிங்கத்தின் நிலையோ மிகமோசமாக இருந்தது.
முள்ளம் பன்றியின் முற்களும் குழவிகளின் கொட்டுதலிலும் வலி பொறுக்க முடியாத சிங்கம் வந்த வழி திரும்பிச் சென்றது. குட்டி யானை கடைசியாக நதிக் கரைக்கு வந்து சேர்ந்தது. அங்கே தன் தாயைக் கண்டது. உம்மா உம்மா இதோவந்து விட்டேன். என்னைத் தேடினீங்களா? என்று கேட்டது. எங்கே போய் இருந்தாய் மகனே? என்று தாய் யானை கேட்டது. குட்டி யானை நடந்தவற்றையல்லாம் ஒன்று விடாமல் கூறி முடித்தது.
0 Comments